இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வு!

DIN

புதுதில்லி: மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பிறகு வெளிநாட்டு பயணங்களிலிருந்து பிரதமர் மோடி திரும்பிய பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று   நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்ட  முடிவுகளின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. 

இதன் காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT