இந்தியா

சொத்து குறித்த தகவல் மறைப்பு: லாலு மகனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

DIN

சட்டப் பேரவைத் தேர்தலின்போது அளித்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து குறித்த தகவலை மறைத்ததாக, பாட்னா நீதிமன்றத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாஜக சட்டமேலவை உறுப்பினர் சுரஜ் நந்தன் பிரசாத், இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். அதில், கடந்த 2015ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில், மகுவா தொகுதியில் தேஜ் பிரதாப் போட்டியிட்டபோது, அவுரங்காபாதில் இருக்கும் அவருக்குச் சொந்தமான நிலம் குறித்த தகவலை தெரிவிக்காமல் வேண்டுமென்றே மறைத்து விட்டார்; அங்கு தனியார் வாகன விற்பனையகம், தேஜ் பிரதாப் யாதவ் குடும்பத்தினரின் நிறுவனம் பெயரில் செயல்பட்டு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீது வரும் 22-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
முன்னதாக, பிகார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடியும், லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தபோது, அவுரங்காபாதில் தேஜ் பிரதாபுக்கு சொந்தமாக நிலம் இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT