இந்தியா

நடிகை பாவனா விவகாரம்: விசாரணைக்கு ஆஜரான திரைப்பட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி

DIN

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீஸாரிடம் விசாரணைக்கு ஆஜரானபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மலையாள திரைப்பட இயக்குநர் நாதிர் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாவனா கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலரால் கடத்தப்பட்டார். அவர்களால் காரிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, அவரை சாலையில் இறக்கிவிட்டுவிட்டு காரில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக பாவனா, காவல் துறையிடம் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் பல்சர் சுனில், பிரபல நடிகர் திலீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர் நாதிர் ஷாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். அதனடிப்படையில், ஆலுவாவில் போலீஸார் முன் அவர் வெள்ளிக்கிழமை ஆஜரானார். அப்போது, போலீஸார் கேள்வி கேட்கத் தொடங்கியபோது அவரது உடல்நலம் குன்றியது.
இதையடுத்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை போலீஸார் அனுமதித்தனர். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
"உடல்நலம் தேறியவுடன் அவரிடம் விசாரணை நடத்தப்படும்' என்று ஆலுவா காவல் துறைக் கண்காணிப்பாளர் ஏ.வி.ஜார்ஜ் தெரிவித்தார். பாவனா வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நாதிர் ஷாவுக்கு அறிவுறுத்திய நீதிமன்றத்தில் இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூரையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT