இந்தியா

பயங்கரவாதிகளின் பிணங்கள் அவமதிப்பு: உரிய நடவடிக்கை எடுக்க ராணுவம் உறுதி

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை வீரர்கள் அவமதித்ததாகக் கூறப்படும் விடியோ குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரையொட்டி அமைந்துள்ள நெளகாமில், லஷ்கர் பயங்கரவாதிகள் அபு இஸ்மாயில், அபு காசிம் ஆகிய இருவரை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
அதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை வீரர்கள் கயிறு கட்டி தரதரவென்று இழுத்து வரும் விடியோ, சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதுகுறித்து ராணுவத்தின் ஸ்ரீநகர் பிரிவு செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் காளியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்கள் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விடியோவை ராணுவம் ஆய்வு செய்யும். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர். 
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அபு இஸ்மாயில், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தளபதி என்பதும், கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி 8 அமர்நாத் யாத்ரீகர்கள் உயிரிழக்கக் காரணமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர் மூளையாகச் செயல்பட்டார் என்பது குறிப்
பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT