இந்தியா

மக்களவை நெறிமுறைகள் குழுத் தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்

DIN

மக்களவை நெறிமுறைகள் குழுவின் (எதிக்ஸ் கமிட்டி) தலைவராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவையில் உறுப்பினர்கள் யாரேனும் நெறிகளுக்கு எதிராக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் புகார் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டால், அதை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தும். அதேபோல், மக்களவை உறுப்பினர்களின் தகாத செயல்கள் குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்தும் அதிகாரமும் நெறிமுறைகள் குழுவுக்கு உண்டு.
இந்தக் குழுவின் தலைவராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இருந்து வந்தார். அதேப் பதவியில் அத்வானியை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் மீண்டும் நியமித்துள்ளார். இதேபோல், மக்களவை நெறிமுறைகள் குழு உறுப்பினர்களாக தற்போது இருக்கும் 14 பேரையும் மீண்டும் அதே பதவியில் சுமித்ரா மகாஜன் நியமித்துள்ளார்.
மேலும், அவை அமர்வுகளில் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதது தொடர்பான விவகாரத்தை கையாளும் குழு தலைவராக பி. கருணாகரனையும், அரசு வாக்குறுதிகள் தொடர்பான குழுத் தலைவராக ரமேஷ் போக்ரியால் நிசாங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, தனிநபர் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு அந்தப் பதவியில் திலிப்குமார் மன்சுக்லால் இருந்து வந்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதி திட்டக் குழுவின் தலைவராக தம்பிதுரை மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவல் அனைத்தும், மக்களவை தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரகுரு கல்லூரியில் விருது வழங்கும் விழா

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

SCROLL FOR NEXT