இந்தியா

சபாநாயகர் உத்தரவில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா? அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து ஆந்திர எம்எல்ஏ தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.

DIN


புது தில்லி: எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து ஆந்திர எம்எல்ஏ தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.

சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றங்கள் எந்தளவு தலையிட முடியும் என்று, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆந்திர எம்எல்ஏ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து ஆந்திர எம்எல்ஏ சம்பத்குமார் தொடர்ந்த வழக்கை, அடுத்த மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆந்திராவில் 5 எம்எல்ஏக்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், ஆந்திர எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட ஆந்திர உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. 

இந்த நிலையில், ஆந்திர எம்எல்ஏ தொடர்ந்த மனுவில், சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா? அதற்கு அதிகாரம் இருக்கிறதா? என்றும், சபாநாயகரின் முடிவில் எந்த அளவுக்குத் தலையிட முடியும்? என்றும் கோரப்பட்டிருந்தது.

தமிழகத்தில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திர எம்எல்ஏ சபாநாயகரின் அதிகாரம் குறித்து மனு தாக்கல் செய்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT