இந்தியா

பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் பாகிஸ்தானை டெரரிஸ்தான் என்றே அழைக்கலாம்: பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா பதிலடி

DIN


நியூயார்க்:  பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக செயல்படும் பாகிஸ்தானை இனி டெரரிஸ்தான் என்றே அழைக்கலாம் என்று ஐ.நா.சபையில் இந்தியா அதிரடியாக பதிலடி தந்துள்ளது. 
 
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி, பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் போர்க்குற்றங்களை இந்தியா தூண்டி வருதாகவும் குற்றம் சாட்டினார். 

பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஈனம் கம்பீர் இந்தியா சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். 

இந்தியாவைப் பொறுத்தவரையில், ஜம்மு-காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும், எல்லைக்குட்பட்ட பயங்கரவாதத்தை தூண்டி இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதில் பாகிஸ்தான் வெற்றி பெற முடியாது.

சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை உருவாக்கி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் இப்போது உள்ளது. எல்லை தாண்டும் பயங்கரவாதத்தால் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முடியாது. 

எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் அவர்கள் தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் திட்டங்களுக்கு வெற்றி கிடைக்காது.

பாகிஸ்தானின் தெருக்களில் சதந்திரமாகவும், சர்வசாதாரணமாக சுற்றி திரியும் பயங்கரவாதிகளை வைத்துக் கொண்டு, மனித உரிமைகளை பாதுகாப்பது பற்றி பாகிஸ்தான் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.  

பயங்கரவாதங்கள் உள்நாட்டில் தோல்வியடைந்த பாகிஸ்தானிடமிருந்து ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்த பாடம், உலகத்திற்கு தேவையில்லை என்றும்  உலகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை கைவிட பாகிஸ்தானுக்கு தான் இன்னும் அறிவுரைகள் தேவைப்படுகிறது என்று கூறினார்.  தற்போது, பயங்கரவாதத்திற்கான விலையை பாகிஸ்தான் கொடுத்து வருகிறது.

சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது. எனவே பாகிஸ்தானை இனி டெரரிஸ்தான் என்றே அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT