இந்தியா

உரியில் தாக்குதல் சதி முறியடிப்பு: மேலும் ஒரு பயங்கரவாதி பலி

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் ராணுவத் தலைமையகம் மீது தாக்குதல் நடத்த சதி செய்த பயங்கரவாதிகளில் மேலும் ஒருவர் ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.
உரியில் உள்ள ராணுவத் தலைமையகம் மீது கடந்த ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டும் இதேபோன்ற தாக்குதல் சதியுடன் உரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதல் திங்கள்கிழமை காலை முடிவுக்கு வந்தது. அதன் பிறகு வீரர்கள் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, குண்டு காயங்களுடன் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராணுவத்தினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த பயங்கரவாதி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். எனினும், காயம் காரணமாக தப்ப முடியாமல் உயிரிழந்துவிட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அனைவருமே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர்கள் ஆவர். முன்னதாக, ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் பொதுமக்களில் மூவரும், ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT