இந்தியா

விழாக்கள் மற்றும் விடுமுறை தினங்கள் தொடர்ந்து வருகிறது: மக்களே உஷார்!

DIN

புது தில்லி: ஆயுத பூஜை போன்ற விழாக்கள் வார இறுதி நாளில் வந்திருப்பதாலும், அடுத்த வாரம் முதல் நாளே விடுமுறை தினம் என்பதாலும் பொதுமக்கள் சற்று அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை காரணமாக செப்டம்பர் 29ம் தேதி விடுமுறை தொடங்கி, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறைக்கு ஊருக்குச் செல்வோர் நிச்சயம் வார இறுதி நாளில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிவார்கள் என்று நாங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்.. இந்த நான்கு நாட்களுமே வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பணப்பரிமாற்றம் போன்ற வங்கிப் பணிகள் ஏதேனும் இருந்தால் அதனை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

ஊர்களுக்கு பயணம் செய்வோர் தேவையான பணத்தை முன்கூட்டியே ஏடிஎம்களில் இருந்து எடுத்துக் கொள்வது பல பிரச்னைகளைக் குறைக்கும். பணம் போடுவது, ஏடிஎம்களில் எடுப்பது என எந்த வங்கிப் பணியாக இருந்தாலும் இந்த 4 நாட்களை கவனத்தில் வைத்து செயல்படுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT