இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: பிஎஸ்எஃப் வீரர் சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை வீட்டுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள மொஹலா பகுதியைச் சேர்ந்தவர் ரமீஸ் பரீ (30). இவர் பிஎஸ்எஃப் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், வழக்கமான விடுமுறைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமது வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்நிலையில், அவரது வீட்டுக்குள் பயங்கரவாதிகள் சிலர் புதன்கிழமை இரவு அதிரடியாக புகுந்தனர். பின்னர், அங்குள்ளவர்களை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்தத் தாக்குதலில் ரமீஸ் பரீ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை, இரண்டு சகோதரர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை அவரது வீட்டுக்குள்ளேயே புகுந்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் காஷ்மீரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்ரீநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT