இந்தியா

பொருளாதாரத்தை யஷ்வந்த் சின்ஹா கணிக்கத் தவறிவிட்டார்: அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி

DIN

இந்தியாவின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், பாஜக தலைவருமான யஷ்வந்த் சின்ஹா 2 தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

இது தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பாஜக அரசை அதன் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமாக இருந்தவரே விமர்சித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் பணமதிப்பீட்டு விவகாரத்துக்கு அடுத்து அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி இந்திய பெருளாதாரத்தை வீழ்ச்சி அடையச் செய்துவிட்டது. இவை இரண்டுமே தேவையற்ற திட்டங்கள் என்றார்.

எதிர்கட்சித் தலைவர்கள் இதனை ஆதாரமாக பயன்படுத்தி பாஜக அரசை தாக்கிப் பேசி வருகின்றனர். இதனால் தற்போதைய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 80 வயதிலும் யஷ்வந்த் சின்ஹா வேலை தேடுகிறார் என்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

இந்நிலையில், 2017 இறுதி அல்லது 2018-க்குள் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்திய தேர்தல் அணையம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

இதுகுறித்து பாஜக தலைவரும், மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி பேசினார். அதில் அவர் கூறியதாவது:

அடுத்து நடைபெறவுள்ள குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். எங்கள் கட்சியின் நடவடிக்கைகள் சரியானதாகவே இருந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னாள் காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமர் மன்மோகன் சிங், பாதாளத்தில் தள்ளிவிட்டார். இந்திய பொருளாதாரத்தையே அடகு வைத்து விட்டார்.

அதனை தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீட்டெடுத்து வருகிறது. பணமதிப்பீட்டு இழப்புக்கு பிறகு கறுப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு வருகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள் சரியாக நடந்துள்ளன. நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.

ஆனால் இதனை எப்போதும் சரியாக அறிந்த நமது முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தற்போது தவறிழைத்துவிட்டார். இம்முறை அவரால் இந்த நடைமுறைகளை சரியாக கணிக்க முடியவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT