இந்தியா

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்துக்கு எதிர்ப்பு: கேரளாவில் நாளை முழு அடைப்பு! 

DIN

திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்ட வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் திங்களன்று முழு அடைப்பு நடைபெற உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் கேரளாவில் திங்கட்கிழமை அன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் தங்களது முழு ஆதரவினைத் தெரிவித்து உள்ளன.

இதன் காரணமாக  அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயக்கப்படாது. இதனால் பொதுமக்களின் அன்றாட பணிகள் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த முழு அடைப்பில் தொழிற்சங்கத்தை சேர்ந்த மத்திய, மாநில அரசு அலுவலக ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளதன காரணமாக அரசுப் பணிகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT