இந்தியா

என் மூளையே எனக்கு எதிரி: ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பெண் செய்தி வாசிப்பாளர் தற்கொலை! 

ஆந்திராவின் பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி தனது அபார்ட்மெண்டின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

ENS

ஹைதராபாத்: ஆந்திராவின் பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி தனது அபார்ட்மெண்டின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திராவில் V6 என்னும் செய்தித் தொலைக்காட்சி உள்ளது. அந்த தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண் செய்தி வாசிப்பாளர் ராதிகா ரெட்டி. தனது நேர்த்தியான வாசிப்பு முறையின் காரணமாக அனைவரிடமும் பிரபலமானவர்.  36 வயதாகும் இவர் ஆறு ஆண்டுகளுக்கு முன் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனது தந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு மகனும் இருக்கிறார்.     

இந்நிலையில் ஞாயிறு இரவு ராதிகா ரெட்டி ஹைதாராபாத்தின் மூஸாபேட் பகுதியில் உள்ள தனது ஸ்ரீவில்லா  அபார்ட்மெண்ட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து, கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.  

தற்கொலை செய்துகொண்ட அவரது கைப்பையிலிருந்து தெலுங்கில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டது. அதில் , 'என் மூளையே எனக்கு எதிரி; என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததது.

ஞாயிறு இரவு பணியிலிருந்து அவர் வீட்டுக்கு திரும்பியதை அக்கம் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர். வேகமாக படிகளில் ஏறியவர் தனது வீட்டிற்குப் போவதற்குப் பதிலாக, ஐந்தாவது மாடிக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது தற்கொலைக்கு மன அழுத்தகம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT