இந்தியா

கர்நாடக தேர்தல்: பாஜக 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், அக்கட்சியின் பழங்குடியின தலைவரும், தற்போது எம்.எல்.சி-யுமாக உள்ள சித்தராஜு ஹெக்கடதேவன்கோட்டே எனுமிடத்தில் களமிறங்குகிறார். 

Raghavendran

கர்நாடக மாநிலத்தின் 225 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. பின்னர் மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு போட்டியிடும் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 9-ஆம் தேதி 72 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக முதல்வர் வேட்பாளருமான பி.எஸ்.எடியூரப்பா ஷிகர்பூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில், 82 தொகுதிகளில் போட்டியிடும் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், அக்கட்சியின் பழங்குடியின தலைவரும், தற்போது எம்.எல்.சி-யுமாக உள்ள சித்தராஜு ஹெக்கடதேவன்கோட்டே எனுமிடத்தில் களமிறங்குகிறார். 

மற்றொரு பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவரான அசோக் பூஜாரி கோகாக் தொகுதியில் போட்டியிடுகிறார். இது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்கிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT