இந்தியா

கரன்சித் தட்டுப்பாடு: அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு! 

நாட்டில் தற்பொழுது கரன்சித் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் வேளையில், அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

புதுதில்லி: நாட்டில் தற்பொழுது கரன்சித் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் வேளையில், அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டின் வட பகுதிகளில் தற்பொழுது கரன்சித் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக ஏ.டி.எம்களில் நோட்டுத் தட்டுப்பாடு காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாகக் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.       

இந்நிலையில் நாட்டில் தற்பொழுது கரன்சித் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் வேளையில், அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய பொருளாதார விவகார துறைச்செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறியதாவது:

கரன்சித் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் வேளையில், அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

வழக்கமான எண்ணிக்கையினை விட ஐந்து மடங்கு எண்ணிக்கையில் நோட்டுகளை அச்சிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிக மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டினை குறைக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT