இந்தியா

உச்ச நீதிமன்ற இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்! 

DIN

புதுதில்லி: உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் வியாழனன்று காலை ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. நீதிபதி லோயா சர்சைக்குரிய வகையில் மரணமடைந்தது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கக் கோரும் மனு மீது, உச்ச நீதிமன்றம் வியாழனன்று காலை தீர்ப்பளித்தது.     

இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பின்னர் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. இணையதளம் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக இணையதள முகப்புப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற இணையதளம் ஹேக் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் பிரேசிலை சேர்ந்த ஹேக்கிங் குழு ஒன்றுக்கு தொடபுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதேபோல சில நாட்களுக்கு முன்னதாக மத்திய பாதுகாப்பு அமைச்சக இணையதளம் உள்பட பல்வேறு அரசு இணையதளங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT