இந்தியா

ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்துங்கள்: பாஜக எம்.பிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு! 

DIN

புதுதில்லி: ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

சமீபகாலமாக நாடுமுழுவதும் குழந்தைகள்  மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் ரீதியான தாக்குதல்கள், கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.  இதைக் கண்டித்தும், முறையான நீதி வழங்கக் கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, கண்டனம் தெரிவித்தார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகளும், கட்சி எம்.பி.க்களும் பல்வேறு கருத்துக்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். இது மத்திய அரசையும், பாஜகவையும் சங்கடத்தில் ஆழ்த்தி வருகின்றன. அவர்களது இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதை நாம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமரின் பிரத்யேக செயலியான  நமோ ‘ஆப்பில்’ வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பாஜக எம்.பிக்களிடம் அவர் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

நாம் தொடர்ந்து செய்யும் தவறுகள் செய்வதன் மூலம் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறாம். இதன் காரணமாக ஊடகங்களின் கேமரா முன்பு நாம் ஏதோ சமூக விஞ்ஞானிகள் போலவும், பெரிய ஆய்வாளர்கள் போலவும் அளவின்றி வார்த்தைகைகளை கொட்டுகிறோம்.

இது நம்மை வெகுவாக சிக்க வைத்து விடுகிறது. தீவிரவாதம் ஆனாலும் சரி, பாலியல் பலாத்காரம் ஆனாலும் சரி, எந்த பிரச்சனைகளை எடுத்துக் கொண்டாலும் நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகள் ஊடகங்களில் பெரிய அளவில் ஊதி பெரிதாக்கப்படுகின்றன.

இதுபற்றிய கவலை கொஞ்சமும் இன்றி நாம் நமது கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது. எனவே ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் ஊடகங்கள் அவர்களது பணியை எப்பொழுதும் போல செய்யட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT