இந்தியா

காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்: தில்லி போலீஸ் அசத்தல்

PTI


புது தில்லி: காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை புது தில்லி காவல்துறையினர் பரிசோதனை முறையில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

இந்த முகத்தை அடையாளம் காணும் (facial recognition system - FRS) தொழில்நுட்பத்தை பரிசோதனை முறையில் செயல்படுத்தி 4 நாட்களில் காணாமல் போன சுமார் 3 ஆயிரம் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை சோதனை முறையில் தில்லி காவல்துறையினர் செயல்படுத்தினர். அந்த வகையில் பல்வேறு குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் 45 ஆயிரம் குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்து ஆராய்ந்ததன் மூலம் ஏப்ரல் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை மட்டும் 2,930 குழந்தைகளின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துமாறு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அது தொடர்பான மென்பொருள் நிபுணர்களின் உதவியோடு தில்லி காவல்துறை இப்பணியில் ஈடுபட்டது.

இந்தியாவில் நாள்தோறும் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இதுபோன்றதொரு தொழில்நுட்பம் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT