இந்தியா

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் ஸ்ரீநகரில் கைது

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் அம்மாநில காவல்துறையால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Raghavendran

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பு முன்னணி கட்சித் தலைவர் முகமது யாசின் மாலிக், அம்மாநில காவல்துறையால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பிரிவினைவாத அமைப்புகளின் ஒன்றிணைந்த தலைமைக் குழுக் கூட்டம் பழைய நகரத்தின் நௌஹட்டா என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பிரிவினைவாத அமைப்பின் தலைவரான யாசின் மாலிக் சென்றுள்ளார். அப்போது அவரது வாகனத்தை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிரடியாக கைது செய்தது.

இதையடுத்து ஹூரியத் கூட்டமைப்பு தலைவர் மிர்வாயிஸ் உமெர் ஃபரூக், யாசின் மாலிக் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்வி்ட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

ஜெ.கே.எல்.எஃப் அமைப்புத் தலைவர் முகமது யாசின் மாலிக் காவல்துறையால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். இதற்காக எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமா மசூதியில் நடைபெறவிருந்த அமைதிப் போராட்டத்தில் கலந்துகொள்ளதான் யாசின் மாலிக் சென்றார். ஆனால் அவரை காவல்துறை வேண்டுமென்று கைது செய்துள்ளது என்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

முருகன்குடியில் சன்மாா்க்க கருத்தரங்கம்

SCROLL FOR NEXT