முகப்பு
இந்தியா

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் 34% இடங்களில் மம்தா கட்சியினர் போட்டியின்றித் தேர்வு

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் 34 சதவீத இடங்களில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர். சம்பந்தப்பட்ட இடங்களில்

இந்தியா

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் 34% இடங்களில் மம்தா கட்சியினர் போட்டியின்றித் தேர்வு

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் 34 சதவீத இடங்களில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர். சம்பந்தப்பட்ட இடங்களில்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் 34 சதவீத இடங்களில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகின்றனர். சம்பந்தப்பட்ட இடங்களில் வேறு எவரும் போட்டியிடாததால் மம்தா கட்சியினரின் வெற்றி வாய்ப்பு ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டு இதேபோன்ற நிலை ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 11 சதவீத இடங்களில் போட்டியின்றி தேர்வாகினர். தற்போது அதை திரிணமூல் காங்கிரஸ் முறியடித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மே 14-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 
ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் மே 17-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் கடந்த சனிக்கிழமையுடன் (ஏப்.28) நிறைவடைந்தது. தேர்தல் ஆணையத் தகவல்கள்படி, பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தவிர வேறு எவரும் போட்டியிடவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 58,692 உள்ளாட்சி இடங்களில் 20,076 இடங்களில் திரிணமூல் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இது மொத்த இடங்களில் 34 சதவீதமாகும். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் மே 1, 3 மற்றும் 5-ஆம் தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது மாநில அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. 
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தங்களது கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய இயலாத சூழல் உருவாகியுள்ளதாகவும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.
மேலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது. 
இதையடுத்து தேர்தல் நடவடிக்கைகள் பாதியுடன் கைவிடப்பட்டன. அதன் பிறகே ஒரேகட்டமாக மே 14-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →