முகப்பு
இந்தியா

ஜேஇஇ முதன்மைத் தேர்வில் ஆந்திர மாணவர் முதலிடம்

ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வில் ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த போகி சூரஜ் கிருஷ்ணா முதலிடம் பிடித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வில் ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த போகி சூரஜ் கிருஷ்ணா முதலிடம் பிடித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சேர்வதற்கு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்வதற்கு ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வினை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது.
2018-ஆம் ஆண்டுக்கான தேர்வின் முடிவுகளை சிபிஎஸ்இ திங்கள்கிழமை வெளியிட்டது.
இந்தத் தேர்வினை வெளிநாடுகளில் உள்ள 8 மையங்கள் உள்பட 1,613 தேர்வு மையங்களில் 10.74 லட்சம் பேர் எழுதினர். இவர்களில், 1,80,331 மாணவர்கள், 50,693 மாணவிகள் என மொத்தம் 2,31,024 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், விஜயவாடாவைச் சேர்ந்த போகி சூரஜ் கிருஷ்ணா முதலிடம் பிடித்துள்ளார். ஆந்திரத்தைச் சேர்ந்த ஹேமந்த் குமார் சோடிபிள்ளி என்பவர் இரண்டாவது இடத்தையும், ராஜஸ்தானைச் சேர்ந்த பார்த் லத்தூரியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்ததாக, ஐஐடி நடத்தும் ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வு, வரும் மே மாதம் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, 2-ஆம் தேதி தொடங்குகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →