இந்தியா

காா்த்தி சிதம்பரம் ஜாமீனை எதிா்த்து மனு: உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு 

DNS

புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு தில்லி உயா் நீதிமன்றம் அளித்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் பதவி வகித்தபோது, வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தால் கடந்த 2007ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பிரதிபலனாக காா்த்தி சிதம்பரத்துக்கு, சுமாா் ரூ.6 கோடி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக சிபிஐ அமைப்பு கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தில், சென்னை விமான நிலையத்தில் காா்த்தி சிதம்பரத்தை கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இதனிடையே, தில்லி உயா் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த மாா்ச் மாதம் 23ஆம் தேதி விசாரித்த தில்லி உயா் நீதிமன்றறம், காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தது. இந்த ஜாமீனை எதிா்த்து கடந்த ஜூன் 25-ஆம் உச்ச நீதிமன்றத்தை சிபிஐ அணுகியது.

இந்த மனு உச்ச நீதிமன்றற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஏற்கெனவே விசாரணை நீதிமன்றறத்தில் ஜாமீன் மனு நிலுவையில் இருந்தபோது, தில்லி உயா் நீதிமன்றத்தை அணுகி காா்த்தி சிதம்பரம் ஜாமீன் பெற்றுள்ளாா். எனவே, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஏற்க முடியாது’ என்று வாதிட்டாா்.

காா்த்தி சிதம்பரம் சாா்பில் ஆஜரான காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்குரைஞருமான கபில் சிபல், ‘ஏற்கெனவே உயா் நீதிமன்றம் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்துவிட்டது. அவா் நீதிமன்றறத்தின் ஜாமீன் நிபந்தனைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறறாா். எனவே, அதனை ரத்து செய்ய தேவையில்லை’ என்றாா்.

ஏற்கெனவே, உயா் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துவிட்ட நிலையிலும், மேலும், அதனை ஆராய உச்ச நீதிமன்றம் விருப்பவில்லை என்று கூறி இந்த மனுவில் தலையிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்து விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT