ஃபரூக் அப்துல்லா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் பாதுகாவலர்களால் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் பாதுகாவலர்களால் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர் நுழைய முயன்றுள்ளார். அவர் வீட்டின் விஐபி நுழைவாயில் வழியாக எஸ்.யூ.வி ரக காரில் சனிக்கிழமை காலை நுழைய முயன்றார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றபோது மீறிச் சென்றதால் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அந்த மர்ம நபர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் எஸ்.பி. விவேக் குப்தா கூறுகையில், அடையாளம் தெரியாத மர்ம நபர் ஃபரூக் அப்துல்லா வீட்டினுள் அத்துமீறி நுழைய முயன்றார். மேலும் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டார். இதனால் அந்த போலீஸாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அந்த மர்ம நபர் உயிரிழந்தார். முதல்கட்ட விசாரணையில் அந்த மர்ம நபர் பெயர் முர்ஃபாஸ் ஷா என்பது தெரியவந்துள்ளது என்றார்.
Advertisement