முகப்பு
இந்தியா

பெண்ணிடம் இருந்து நகை, செல்ஃபோன் திருட்டு: வெளியான சிசிடிவி காட்சிகள்

சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்ஃபோன் திருடப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Updated On : 5 ஆகஸ்ட், 2018 at 12:07 PM
பகிர்:

சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்ஃபோன் திருடப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களை திருடும் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் நிலையில், தற்போது புது தில்லியில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில், சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்ஃபோன் திருடிய வாலிபர், இருசக்கர வாகனத்தில் வரும் தனது கூட்டாளியுடன் தப்பித்துச் செல்கிறான். கடந்த 29-ஆம் தேதி நடைபெற்றுள்ள இந்த திருட்டுச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.