முகப்பு
இந்தியா

என்சிபிசி ஆணையம் பாஜக அரசின் கண் துடைப்பு நாடகம்: மாயாவதி

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பாதுகாப்பு மற்றும் என்சிபிசி ஆணையம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 7 ஆகஸ்ட், 2018 at 3:36 PM
பகிர்:

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு (என்சிபிசி) அரசமைப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டமசோதா, நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேறியது. மக்களவையில் கடந்த 2-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, தற்போது மாநிலங்களவையிலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தலித்களுக்கு எதுவும் செய்யவில்லை. அரசு வேலையாப்புகள் மற்றும் கல்வித்துறையிலும் தலித் மக்களுக்கு போதுமான அளவு இடஒதுக்கீடு கிடைப்பதில்லை. இதனால் தலித் சமூக மக்களுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், தற்போது சில மாநிலங்கள் மட்டுமல்லாது அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் நெருங்கி வரும் வேளையில், இவைகளில் வெற்றிபெற பாஜக-வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பாதுகாப்பு மற்றும் என்சிபிசி ஆணையம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது அரசியல் காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கண் துடைப்பு நாடகம்.

உயர் சமூகத்தில் உள்ள ஏழைகளும், முஸ்லிம் போன்ற சிறுபான்மையினருக்கும் 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.