இந்தியா

பாஜக மரியாதை எதிரொலி: அம்பேத்கர் சிலையை 'புனிதப்படுத்திய' தலித் வழக்கறிஞர்கள்

பாஜக தலைவர் மரியாதை செலுத்தியதன் எதிரொலியாக பால் மற்றும் கங்கை நீர் கொண்டு அம்பேத்கர் சிலையை தலித் வழக்கறிஞர்கள் புனிதப்படுத்தினர்.

ANI

பாஜக தலைவர் மரியாதை செலுத்தியதன் எதிரொலியாக பால் மற்றும் கங்கை நீர் கொண்டு அம்பேத்கர் சிலையை தலித் வழக்கறிஞர்கள் புனிதப்படுத்தினர்.

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரத்தின் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அமைந்துள்ளது. இந்த அம்பேத்கர் சிலைக்கு மாநில பாஜக செயலர் சுனில் பன்சால், வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், மீரட்டைச் சேர்ந்த தலித் வழக்கறிஞர்கள் அந்த அம்பேத்கர் சிலைக்கு உடனடியாக பால் மற்றும் கங்கை நீர் கொண்டு புனிதப்படுத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

பாஜக அரசு தலித்களுக்கு எதிராக செயல்படுவதுடன், முற்றிலும் நசுக்க நினைக்கிறது. தலித் வாக்குகளை கைப்பற்றவே பாஜக-வினர் இதுபோன்று அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மற்றபடி அவர்களுக்கும் அம்பேத்கருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ராகேஷ் சின்ஹா மற்றும் பாஜக-வின் சுனில் பன்சால் ஆகியோர் அம்பேத்கர் சிலையை அசுத்தப்படுத்திவிட்டனர். எனவே நாங்கள் புனிதப்படுத்தினோம் என்றனர்.

முன்னதாக, உத்தர பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் ஜூலை 12-ஆம் தேதி அந்த தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டப் பேரவை உறுப்பினர் மனிஷா அனுராகி, விழா ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டார். இதையடுத்து கங்கை நீர் கொண்டு அக்கோயில் புனிதப்படுத்தப்பட்டதுடன், அக்கோயிலைச் சேர்ந்த சிலைகள் புனிதப்படுத்த அலகாபாத் கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT