இந்தியா

சுதந்திர தின உரையல்ல; தேர்தல் பிரசாரம்: மாயாவதி விமர்சனம்

DIN


பிரதமர் நரேந்திர மோடியின் உரை, சுதந்திர தின உரையாக அமையவில்லை; தேர்தல் பிரசார உரையாக இருந்தது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் ஆற்றிய உரை அவரது வழக்கமான தேர்தல் பிரசார உரையாகவே அமைந்தது. சுதந்திர உரை என்பது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் முக்கியமான நிகழ்ச்சி. அதனை பிரதமர் மோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தக் கூடாது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மோடி, தனது சுதந்திர தின உரையை எழுதியுள்ளார்.
நாட்டில் இப்போது மிகவும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இவற்றைப் பற்றி மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
சுதந்திர தின உரை என்பதை நாடு எதிர்கொண்டு வரும் சவால்களை எதிர்கொள்ள மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் மோடியின் உரை முற்றிலும் கட்சியின் பிரசாரமாக இருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT