வாஜ்பாயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது - ராஜ்நாத் சிங்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு காலமானார். இதையடுத்து, அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்தது, "அடல்ஜியின் மறைவு எங்களுக்கு மிகவும் வருந்தத்தக்க தருணம். அவருடைய உடல் இன்னும் சற்று நேரத்தில் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தலாம்" என்றார்.
Advertisement
Advertisement
இதைத்தொடர்ந்து, அவரது உடல் வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தில்லி விஜய்காட் பகுதியில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.