இந்தியா

62 வயது... 113 குற்ற வழக்குகள்: 8 மகன்கள் உதவியுடன் ஆட்டம் போட்ட பெண் தாதா 'மம்மி' கைது       

புது தில்லியில் 113 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 62 வயது பெண் தாதா 'மம்மி' பஷீரானை தில்லி போலீசார் கைது செய்தனர்.

DIN

புது தில்லி: புது தில்லியில் 113 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 62 வயது பெண் தாதா 'மம்மி' பஷீரானை தில்லி போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புது தில்லியின் சங்கம் விஹாருக்கு அருகேயுள்ள ஒரு காட்டில் சிதைவுற்ற நிலையில் ஒரு சடலம் கிடந்தது. அந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், இதற்கு காரணமாகாக இருந்தவர் தில்லியின் பெண் தாதாவான 'மம்மி' என்ற பெயரில் அழைக்கப்படும் பஷீரான் என்பதைக் கண்டறிந்தனர்.

இந்நிலையில் போலீசார் தன்னைக் கைது செய்ய வருவதை  பஷீரான் தப்பியோடி இதுவரை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் மீது தொடரப்பட்ட வழக்குகளின் காரணமாக பஷீரானின் வீடு மற்றும் பல்வேறு சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரது சொத்துகள் முடக்கப்பட்டன.

கடந்த 16 வருடங்களாக பஷீரான் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த 9  வருடங்களாக தனது 8 மகன்கள் உதவியுடன் இவர் பல்வேறு குற்றங்களைப் புரிந்துள்ளார். கொலை மற்றும் கொலை முயற்சி என்ற வகையில் மட்டும் இவர் மீது 42 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தற்போது இவரது மகன்களில் 2 பேர் சிறையிலும், 4 பேர் தலைமறைவாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெண் தாதா 'மம்மி' பஷீரானை தில்லி போலீசார் ஞாயிறன்று கைது செய்தனர்.

7 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கை வந்த பஷீரான் மறைந்துள்ள இடம் பற்றிய தகவல் போலீசாருக்குத் தெரிய வர, விரைந்து சென்ற போலீசார் அவரை சங்கம் விஹார் பகுதியில் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தவசுக் காட்சி

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தேவை - முதல்வரிடம் இடதுசாரிகள், விசிக மனு

இதுவரை பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவா்களுக்கு இன்று கலந்தாய்வு

காமராஜா் சாலையில் திருநங்கைகள் மறியல்

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT