இந்தியா

கர்நாடக வெள்ளத்துக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் மோடி உறுதி

DIN

கர்நாடக மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி முதல்வர் குமாரசாமி உறுதியளித்தார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 14-ஆம் தேதி முதல் கன மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் குடகு, தக்ஷி்ன கன்னடா, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் ஷிவமோக்கா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. 

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சனிக்கிழமை அறிவித்தார். 

இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருப்பதாவது,

"கர்நாடகத்தில் ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து முதல்வர் குமாராசாமியிடம் பேசினேன். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்திக்கிறேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT