இந்தியா

எழுந்த எதிர்ப்புகள்..ரகசியமாகக் கரைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி 

கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய நாகலாந்து மாநிலத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி ரகசியமாகக் கரைக்கப்பட்டது.

ENS

கவுஹாத்தி: கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய நாகலாந்து மாநிலத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி ரகசியமாகக் கரைக்கப்பட்டது.

உடல்நலக் குறைவின் காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மாலை காலமானார். மறுநாள் அவரது உடலானது தில்லியில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது

இதனைத் தொடர்ந்து அவரது அஸ்தியினை நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.  இதற்காக தனியான நிகழ்வு ஒன்றில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்பட்டது

இந்நிலையில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய நாகலாந்து மாநிலத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி ரகசியமாகக் கரைக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நாகாலாந்து பழங்குடிகள் கூட்டமைப்புகள், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் கிறிஸ்துவ தேவாலயத் தலைமை ஆகிய மூன்று தரப்பிலிருந்தும், இந்த சடங்கானது நமது நிலத்திற்கு ‘அந்நியமான ஒன்று’ என க் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

முன்னதாக நாகாலாந்து பழங்குடிகள் கூட்டமைப்புகளின் தலைமை அமைப்பான லோதா ஹோஹோ சார்பில் கூறுகையில், ‘ஆறுகளில் அஸ்தியைக் கரைப்பது என்பது கலாச்சாரப் பழக்கமோ அல்லது மத நம்பிக்கையோ கிடையாது. இதன் காரணமாக நாகர்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தினை எந்த விதத்திலும் நீர்த்துப் போகச் செய்யக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டது.      

இத்தகைய எதிர்ப்புகளின் காரணமாக வாஜ்பாய் அஸ்தியானது முந்தைய திட்டப்படி டோயங் நதியில் ஒகா மாவட்டத்தில் கரைப்பதற்குப் பதிலாக, திமாபூர் மாவட்டத்தில் கரைக்கப்பட்டது.இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் டெம்ஜென் லோங்குமேர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வாஜ்பாயின் அஸ்தியானது திட்டமிடப்படி முறையாக யாருடைய நம்பிக்கையையும் காயப்படுத்தாமல் நதியில் கரைக்கப்பட்டது. . 

இங்குள்ளவர்கள் உண்மை எதுவென்று தெரியாமல் சிறிய விஷயத்தினை பெரிதாக மாற்றுகிறார்கள். இது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை; மாறாக தேசிய அளவிலான விஷயம். ஒரு மாபெரும் மனிதர் தொடர்பான விஷயம்.

எனது தலைமையில் நாகாலாந்து பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவானது அஸ்தியை கரைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டது.  கிறிஸ்துவர்களான நாங்கள் பிரார்த்தனை செய்தோம். மத குருக்கள் அவர்களது கடமையைச் செய்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனாலும் அவர் அஸ்தி கரைக்கப்பட்ட இடம் எது என்பதனைக் கூற மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT