இந்தியா

மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்: கேரள ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் நிவாரணப் பொருட்கள்

கேரளாவுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த 700 டன் நிவாரணப் பொருட்கள் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக கேட்பாரற்றுக் கிடக்கிறது.

ENS


கொச்சி: கேரளாவுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வந்த 700 டன் நிவாரணப் பொருட்கள் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக கேட்பாரற்றுக் கிடக்கிறது.

கன மழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கிய கேரள மக்களுக்கு உதவும் வகையில், புது தில்லி, புனே, விஜயவாடா, அகமதாபாத், சென்னை, பெங்களூரு, கோவா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கேரள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டிய நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் கடைக்கண் பார்வைக்காக ரயில் நிலையத்திலேயே காத்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் பெயரைச் சுமந்து கொண்டு கேரளாவுக்குச் செல்லும் ரயில்களில் ஏராளமான நிவாரணப் பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. பல டன் நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை 76 டன் பொருட்கள் மட்டுமே வெளியே அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் இந்த நிவாரணப் பொருட்களை ஏற்றி ரயில்வே அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர். இதற்காக தொழிலாளர்களையும் நாங்கள் வேலைக்கு பணியமர்த்தியுள்ளோம்.

எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் ஏராளமான நிவாரணப் பொருட்கள் தேங்கியிருப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் அறிவுறுத்தியுள்ளோம். இவற்றை அப்புறப்படுத்துவது எளிதான காரியம்தான். ஆனால் இவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேர்ப்பிப்பதுதான் கடினம் என்று கூறுகிறார்கள் உயர் அதிகாரிகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT