கோப்புப்படம் 
இந்தியா

ஒரே நேரத்தில் தோ்தல்: சட்ட ஆணையம் ஆதரவு

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் திட்டத்துக்கு சட்ட ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் திட்டத்துக்கு சட்ட ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகத்திடம் சட்ட ஆணையம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"நாட்டில் தொடா்ந்து தோ்தல் நடத்தப்பட்டு வருவதற்கு, மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது ஒன்றே தீா்வாக அமையும். எனவே, ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவையை தவிா்த்து பிற அனைத்து சட்டப் பேரவைகளுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட வேண்டும்.

இதேபோல், ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டால், பொது மக்களின் வரிப்பணத்தை நம்மால் சேமிக்க முடியும். தோ்தல் தொடா்பான அரசு நிா்வாகம், பாதுகாப்பு படைகளுக்கு இருக்கும் சுமையை குறைக்கவும் உதவியாக இருக்கும். அரசின் கொள்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் முடியும்.

மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டால், அரசு நிா்வாகமானது, தோ்தல்களில் கவனம் செலுத்துவதை விடுத்து, வளா்ச்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடியும். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தற்போதைய வடிவின்படி, மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது சாத்தியமாகாது.

எனவே, மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த ஏதுவாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம், தோ்தல் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்" என்று இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT