புது தில்லி: நாடு முழுவதும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது 4,122 குற்ற வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன என உச்ச நீதிமன்றத்தில் செவ்வாயன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரி பா.ஜ.க. தலைவரும் , வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு செவ்வாயன்று விசாரணை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக, நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை பற்றி மாநில மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களிடம் இருந்து விரிவான தகவல்களை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, மாநிலங்கள் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களிடம் இருந்து பெற்ற தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாயன்று சமர்ப்பித்துள்ளார். இதில், நடப்பு மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது தீர்க்கப்படாமல் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 4,122 ன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த எண்ணிக்கையில் 30 ஆண்டுகளுக்கு முற்பட்ட சில வழக்குகளும் அடங்கியுள்ளன என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.