இந்தியா

மேக்கேதாட்டு விவகாரம்: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியும் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு

DIN

மேக்கேதாட்டுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்துள்ளது. 

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் 67.16 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கும் வகையில் ரூ.5,912 கோடி மதிப்பீட்டில்அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பான முன்சாத்தியக் கூறு அறிக்கையை கர்நாடக அரசு அண்மையில் அனுப்பியிருந்தது.

இதனடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளுடன் மத்திய நீர் ஆணையம் அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கு தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகஅரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது புதுச்சேரி அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT