இந்தியா

30 ஆயிரம் கார்களை அனுமதியின்றி பயன்படுத்தும் தில்லி, மத்திய அரசு அதிகாரிகள்

30 ஆயிரம் கார்களை தில்லி மற்றும் மத்திய அரசுகளின் அதிகாரிகள் அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக தில்லி மாசு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

ENS

30 ஆயிரம் கார்களை தில்லி மற்றும் மத்திய அரசுகளின் அதிகாரிகள் அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக தில்லி மாசு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் தில்லியில் நாளுக்குநாள் காற்று மாசு அளவு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அவர்கள் தங்களது வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த காற்று மாசு குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தில்லி அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 25 முதல் 30 ஆயிரம் தனியார் கார்களை முறையான அனுமதியின்றி மத்திய அரசு, தில்லி அரசு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தி வருவதாக மாசு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு, தில்லி மற்றும் மத்திய அரசுகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் மாணவா்களுக்கு நல உதவிகள்

வள்ளியூா் வியாபாரிகள் சங்க தோ்தல்

தென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்பு

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் கட்டடக் கழிவுகள் குவிப்பால் விபத்து அபாயம்

சத்தியமங்கலம் அருகே காட்டு யானைத் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT