முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜிநாமா

நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது

Updated On : 10 டிசம்பர், 2018 at 1:35 PM
பகிர்:

புதுதில்லி: நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு விலகிய உபேந்திர குஷ்வாகா, தனிக் கட்சி தொடங்கி, பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனிடையே கடந்த மாதம் அக்டோபர் மாதம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவை உபேந்திர குஷ்வாகா சந்தித்தார்.

Advertisement

இதனால், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பாரா? என்பது தொடர்பாக யூகங்கள் வெளியாகின. ஆனால், எனது கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் நீடிக்கிறது. அடுத்த முறையும் பிரதமராக மோடியே வர வேண்டும் என்பதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறேன் என்று உபேந்திர குஷ்வாகா தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவருமான உபேந்திர குஷ்வாகா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும் ஜனநாயக கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். 

உபேந்திர குஷ்வாகாவின் அறிவிப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.