இந்தியா

மணமகன் தேடாததால் வட்டியுடன் கூடிய பதிவுக்கட்டணம் திருப்பிச் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்

ENS

மணமகன் தேட முடியாத காரணத்தால் பதிவுக் கட்டணத்தை வட்டியுடன் திருப்பிச் செல்ல மேட்ரிமோனி இணையதளத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவம் படித்துள்ள தனது மகளுக்கு நிகரான மணமகனை தேடுவதற்காக அப்பெண்ணின் தந்தை இலைட் மேட்ரிமோனி எனும் இணையதளத்தில் பதிவு செய்தார். இதற்காக பதிவுக் கட்டணமாக ரூ. 55 ஆயிரம் செலுத்தியிருந்தார். 

ஆனால், ஆதி கன்னடர் பிரிவில் அவர்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் மணமகன் கிடைக்கவில்லை என அந்த மேட்ரிமோனி இணையதளம் தெரிவித்துவிட்டது. இதையடுத்து அப்பெண்ணின் தந்தை பெங்களூரு நிகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

எஸ்.எல்.பாடீல், பி.கே.சாந்தா ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து பதிவுக் கட்டணம் ரூ. 55 ஆயிரம் மற்றும் அதற்கான 6 சதவீத வட்டி, ரூ.5 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை, ரூ. 2 ஆயிரம் வழக்குக் கட்டணம் ஆகியவற்றை அந்த பெண்ணின் தந்தையிடம் வழங்க வேண்டும் என மேட்ரிமோனி இணையதளத்துக்கு உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT