இந்தியா

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம் 

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

DIN

புது தில்லி: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

மத்திய அரசுடன் பல்வேறு விஷயங்களில் எழுந்த மோதல் போக்கின் காரணமாக ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் திங்களன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

1980-ஆம் ஆண்டு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் (63) தமிழக அரசில் தொழில் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் பொருளாதார விவகாரத் துறை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து ஓய்வு பெற்றுள்ளார். 

தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அவர் இந்த பதவியில் மூன்று ஆண்டுகள் நீடிப்பார் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT