இந்தியா

சக்திகாந்த தாஸ் நியமனம் தவறான முடிவு: சுப்ரமணியன் சுவாமி

DIN

ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த பதவியில் சக்திகாந்த தாஸை (61) மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நியமித்தது. 

இதையடுத்து அவர் புதன்கிழமை ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக பதவியேற்றார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டது தவறான முடிவு, அவர் ப.சிதம்பரத்துடன் இணைந்து பல ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அந்த வழக்குகளில் இருந்து ப.சிதம்பரத்தை காப்பாற்றும் செயலையும் செய்துள்ளார். இந்த நியமனம் எதனால் முடிவு செய்யப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த முடிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT