இந்தியா

ரஃபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது: அமித் ஷா

DIN

ரஃபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

ரஃபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அமித் ஷா,
ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் உண்மை வெண்றுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பு பொய்யை பரப்பும்(காங்கிரசின்) அரசியலுக்கு கிடைத்த அடி. ரஃபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்த முயன்றது முறியடிக்கப்பட்டுள்ளது.  ரஃபேல் போர் விமான கொள்முதல் பற்றிய பொய்ப் பரப்புரைக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

ரஃபேல் விவகாரத்தில் எந்த அடிப்படையில் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார் என விளக்கம் தர வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT