இந்தியா

பாலியல் வழக்கில் ஆர்ஜேடி எம்எல்ஏ உள்பட 6 பேர் குற்றவாளிகள்

DIN

பிகாரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் எம்எல்ஏ ராஜ் வல்லப் யாதவ் உள்பட 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்து பாட்னா நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி, நவாடா தொகுதி எம்எல்ஏவான ராஜ் வல்லப் யாதவ், பிகார் ஷரீஃப் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் உள்பட 6 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி பரசுராம் யாதவ், போதிய ஆதாரங்கள் இருப்பதால் 6 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.
இதுகுறித்து அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞர் ஷியாமேஸ்வர் தயால், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தண்டனை விவரங்கள் வரும் 21-ஆம் தேதி அறிவிக்கப்படும். இடைநீக்கம் செய்யப்பட்ட ஆர்ஜேடி எம்எல்ஏவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு வலியுறுத்துவோம். தண்டனை விவரம் வெளியான பிறகு, அவர் தனது எம்எல்ஏ பதவியையும் இழக்க நேரிடும். அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கக் கூடிய வகையில், 6 ஆண்டுகள் வரை குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8 (3) பிரிவின் கீழ், சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜ் வல்லப் யாதவ் இழக்க நேரிடும் என்றார் ஷியாமேஸ்வர் தயால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT