இந்தியா

ஆமிர்கான் நிகழ்ச்சிக்கு இடம் தர சீனப் பல்கலை. மறுப்பு

DIN


நடிகர் ஆமிர்கான் நடித்துள்ள படத்துக்கான விளம்பர நிகழ்ச்சிக்கு சீனப் பல்கலைக்கழகம் ஒன்று அனுமதி மறுத்த நிலையில், அந்த நிகழ்ச்சி விடுதி ஒன்றில் நடத்தப்பட்டது.
பெய்ஜிங்கிலுள்ள குயின்டாங் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற இருந்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்துக்கான விளம்பர நிகழ்ச்சியில் ஆமிர்கான் பங்கேற்று சீன ரசிகர்களுடன் கலந்துரையாடுவதாக இருந்தது. 
இந்நிலையில், தங்களிடம் நிகழ்ச்சி நடத்துவதற்கான முன் அனுமதி பெறவில்லை என்று கூறி, ஆமிர்கானின் நிகழ்ச்சிக்கு அப்பல்கலைக்கழகம் அனுமதி அளிக்க மறுத்தது. இதையடுத்து, விடுதி ஒன்றில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆமிர்கானின் தங்கல், சீக்ரெட் சூப்பர் ஸ்டார் ஆகிய படங்களுக்கு சீனாவில் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT