இந்தியா

பெய்ட்டி புயல் பாதிப்பு: விஜயவாடாவில் மேலும் 4 பேர் சாவு

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கட்ரினிகோனாவில் பெய்ட்டி புயல் திங்கள்கிழமை மதியம் கரையை கடந்தது. 

ENS

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கட்ரினிகோனாவில் பெய்ட்டி புயல் திங்கள்கிழமை மதியம் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த பகுதியில் பயங்கர காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டித் தீர்த்தது. 

பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது, கட்ரினிகோனா, தல்லரேவு, மல்கிபூரம் ஆகிய பகுதிகளில் 85 முதல் 90 கிலோ மீட்டர் வரையிலும் பயங்கர வேகத்தில் காற்று வீசியது. இதனால் அப்பகுதிகளில் உள்ள ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. பெரும்பாலான பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பெய்ட்டி புயல் பாதிப்பு காரணமாக விஜயவாடா மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை புதன்கிழமை மேலும் 4-ஆக அதிகரித்தது. நிலத்தில் தேங்கியிருந்த வெள்ள நீரை சீர்செய்ய சென்ற விவசாயி, சாலையில் விழுந்திருந்த மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் சிக்கி விபத்துக்குள்ளானதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கடுங்குளிர் காரணமாக இரு முதியவர்கள் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நுண்ணறிவுக்குப் புலப்படாது!

காரையாறு காணிக்குடியிருப்பில் சிறுத்தை தாக்கி இளைஞா் காயம்

கும்ப ராசிக்குப் பணவரவு: தினப்பலன்கள்!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 டன் யூரியா, கோதுமை பறிமுதல்

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்கள் 250 போ் கைது

SCROLL FOR NEXT