இந்தியா

மக்களவையில் வாடகைத் தாய் முறை (ஒழுங்குபடுத்துதல்) மசோதா தாக்கல்

DIN

வாடகைத் தாய் முறை (ஒழுங்குபடுத்துதல்) மசோதா, மக்களவையில் கடந்த 2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், சுகாதாரம்-குடும்ப நலன் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அந்த மசோதா அனுப்பப்பட்டது. அக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், திருத்தங்களுடன் கூடிய வாடகைத் தாய் முறை (ஒழுங்குபடுத்துதல்) மசோதா மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. எனவே, இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட 3 மாதங்களில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மத்திய அரசின் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட உள்ளது.  

வாடகை தாய் முறையின் மையமாக இந்தியா மாறி வருவதை கருத்தில் கொண்டு, வர்த்தக ரீதியிலான வாடகைத் தாய் முறைக்கு தடை விதிக்கவும், அதேவேளையில் நெறிமுறையுடன் கூடிய வாடகைத் தாய் முறைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT