இந்தியா

மோடி இடத்தில் நானா? வாய்ப்பே இல்லை என்கிறார் இவர்!

ANI


புது தில்லி: இல்லை, இல்லவே இல்லை, நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில அரசு நிர்வாகம் ஒன்று ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பிய கடிதத்தில், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றால் பிரதமர் பதவியில் இருந்து மோடியை நீக்கிவிட்டு, அப்பதவிக்கான வேட்பாளராக நிதின் கட்கரியை நியமிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் செய்தியாளர்களிடம் கேட்டதற்குதான் மேற்கண்ட பதிலை அவர் கூறியுள்ளார்.

அதாவது, இல்லவே இல்லை, நான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கங்கைப் பணியை முதலில் முடிக்க வேண்டும். எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை பணிகளை கட்டமைக்க வேண்டும், சார் தாம் பகுதிக்கு சாலை அமைக்க வேண்டும், இன்னும் இதரப் பணிகள் உள்ளன. இப்பணிகளை செய்வதில்தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவற்றை செய்து முடிக்க வேண்டும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது பிரம்மபுத்திரா நதியின் மீது 6 பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதே போல, நீர்வழிப் பாதைகளையும் 5 நட்சத்திர மற்றும் 7 நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளோம் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT