இந்தியா

தில்லியைத் தாக்கத் திட்டம்: ஐ.எஸ் ஆதரவுக் குழுவின் தலைவர் உட்பட 10 பேர் தேசிய புலனாய்வு ஆணையத்தால் கைது 

தில்லி உட்பட வடமாநிலங்களில் தாக்கல் நடத்தத் திட்டமிட்டதாக, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்  ஆதரவுக் குழுவின் தலைவர் உட்பட 10 பேர் தேசிய புலனாய்வு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ANI

புது தில்லி: தில்லி உட்பட வடமாநிலங்களில் தாக்கல் நடத்தத் திட்டமிட்டதாக, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்  ஆதரவுக் குழுவின் தலைவர் உட்பட 10 பேர் தேசிய புலனாய்வு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட குழு ஒன்று, இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பிறகு செய்யப்பட்ட தொடர் கண்காணிப்பு மற்றும் ரகசிய விசாரணைகளின் அடிப்படையின் அந்த அமைப்பின் பெயர் ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம் என்பதும், இந்த அமைப்பானது வட இந்தியாவில் குறிப்பாக தில்லியில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்தது. இந்த பயங்கரவாத குழு கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளது என்பதும், இதில் 20 பேர் உறுப்பினர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த குழு தொடர்பாக கிடைத்த தகவலை கொண்டு தேசிய புலனாய்வு ஆணையம் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் புதனன்று அதிரடி சோதனையை நடத்தியது. 

தில்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் ஒரே நேரத்தில் 16 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் இந்த குழுவின் தலைவர் உட்பட குழுவுடன் தொடர்புடைய 10 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகாவில் இருந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி அசிம் அருண் கூறியுள்ளார். மேலும் ஐந்து பேர் வடகிழக்கு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன  

சோதனைகள் வேறு சில இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT