இந்தியா

மாந்த்ரீக  சக்தி பெறுவதற்காக மாமியாரைக் கொன்று ரத்தம் குடித்த மருமகன் 

அபூர்வ மாந்த்ரீக  சக்தி பெறுவதற்காக மாமியாரைக் கொன்று ரத்தம் குடித்த மருமகனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

DIN

ராஞ்சி: அபூர்வ மாந்த்ரீக  சக்தி பெறுவதற்காக மாமியாரைக் கொன்று ரத்தம் குடித்த மருமகனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம்  ரங்கமடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிஹலிந்ரா லோரா.  தனது மாமியார் ஷகுரா தேவி (45)-யை  கடந்த இரு நாட்களுக்கு முன் கொடூரமாக கொலை செய்து விட்டு தலைமறைவானார். இதையடுத்து ஷகுராவின் கணவர்  பர்னா போலீசில் புகார் அளித்தார். போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த லோராவை போலீசார் புதனன்று கைது செய்தனர்.

லோரா அப்போது போலீசாரிடம்  அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

நான் பில்லி, சூனியம், மாந்ரீகம் போன்ற விஷயங்களை பயிற்சி செய்து வந்தேன். எனக்கு இதில் அபூர்வ மாந்த்ரீக சக்திகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக என் மாமியாரை குத்திக் கொலை செய்தேன். பின்னர் அவரின் ரத்தத்தை குடித்தேன். 

இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

இதையடுத்து போலீசார்  லோராவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல செவ்வாயன்று தெலுங்கானவில் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் மாந்த்ரீகம் செய்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில் பெற்ற தாயைக் கொன்ற மகன் ஒருவன் கைது செய்யப்பட்டான் என்பதுகுறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT