இந்தியா

பிரதமர் என்பதையே நரேந்திர மோடி மறந்துவிட்டார்: ராகுல் பதிலடி

Raghavendran

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய நரேந்திர மோடி, இந்தியாவின் இந்த நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான காரணம். இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் நாட்டினை பிளவுபடுத்திவிட்டது என்று கடுமையாக விமரிசித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:

இந்தியாவுக்கு தற்போது தான் பிரதமர் என்பதையே நரேந்திர மோடி மறந்துவிட்டார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டி வருகிறார்.

சுமார் 1 மணிநேரத்துக்கும் மேல் பேசிய மோடி, அதில் விவசாயம், ரஃபேல் ஒப்பந்தம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி, ஆந்திர மாநிலத்தின் நிலை உள்ளிட்டவைகளை குறிப்பிடவில்லை. மாறாக இது முழுவதும் அரசியல் ரீதியிலான பேச்சாகவே அமைந்துள்ளது.

நாங்கள் அனைவரும் இவ்விவகாரங்கள் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் உரையினை ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் பிரசார மேடைகளில் பேசுவது போன்று தனது நாடாளுமன்ற உரையை முன்வைத்தார். அவரின் மொத்த கவனமும் காங்கிரஸ் கட்சியை விமரிசிப்பதில் மட்டுமே இருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT