இந்தியா

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாஜக மிகப்பெரிய ஊழல் செய்துள்ளது: வீரப்ப மொய்லி

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஆளும் பாஜக அரசு மிகப்பெரிய ஊழல் செய்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி புதன்கிழமைகுற்றம்சாட்டியுள்ளார்.

Raghavendran

பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

கடந்த 2008-ஆம் ஆண்டில், அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்துக்கு ரூ. 586.1 கோடிக்கு ஒப்பந்தத்தம் செய்தது. ஆனால், அடுத்த அமைந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒரு விமானத்துக்கு ரூ. 1,570.8 கோடிக்கு ஒப்பந்த அனுமதியை உயர்த்தியுள்ளது. 

இரு நாடுகளுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக நிறைய கேள்விகள் எழத்தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக தனது மௌனத்தை கலைக்க வேண்டும். ஆளும் பாஜக அரசு இவ்விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அவ்வாறு மிகப்பெரிய தொகைக்கு இந்த ஒப்பந்தம் நடைபெற்றிருந்தால் அந்த இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது. இது பாஜக அரசின் மிகப்பெரிய ஊழலாகும். ஏனெனில் இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு விதியும் மீறப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உரிய பதிலை பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்க வேண்டும். இது பாஜக அரசின் மிகப்பெரிய ஊழலாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!

ஆசிய யு19 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்!

சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்

பகடைக்காயாகும் உக்ரைன்!

காக்க உதவுமா காப்பீடுகள்?

SCROLL FOR NEXT